Vartegar - cover

Vartegar

S.K.Sundaram

  • 30 augustus 2019
  • 9781684662012
Wil ik lezen
  • Wil ik lezen
  • Aan het lezen
  • Gelezen
  • Verwijderen

Samenvatting:

சிப்பாயாக இருக்காதீர்கள், ராஜாவாக இருங்கள்: பெரும்பாலான மக்களின் எண்ணம், ஒரு வேலை, மாதச் சம்பளம் இருந்தால் போதும் என்று திருப்தி கொள்வார்கள். ஆனால் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, அவர்களின் முதலாளிகள் எவ்வளவு இலாபம் சம்பாதிக்கின்றார்கள் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க இது சரியான நேரம்.ஒருவர் முதலாளி என்ற நிலைக்குச் செல்லாமல் தடுக்க பல விதமான தடைகளும், காரணிகளும் உள்ளன. அவர்கள் வியாபாரம் சம்பந்தப்பட்ட பல சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும், பல காரணங்களினால் அதை அவர்கள் மனதிலே புதைத்து விடுகிறார்கள். “வர்த்தகர்” அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதோடு, அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து, தன்நம்பிக்கையை அதிகரித்து, அவர்களைச் சிப்பாய் நிலையில் இருந்து ராஜாவாக மாற்றும்.இந்த உலகம் வணிகரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் ஆம் என்று ஒப்புக்கொண்டால், நீங்கள் சரியான பாதையில் இருக்கின்றீர்கள்.எல்லோரும் பணக்காரனாக வேண்டும் என்று கனவோடுதான் இருக்கின்றோம். ஆனால் சிலர் மட்டுமே அதை உண்மையாக்குகின்றார்கள். பணக்காரனாக வேண்டும் என்றால்,முதலில் உங்கள் பண்புகளைச் செழிப்பாக மாற்ற வேண்டும்.உங்களின் எண்ணம், மனம், செயல், நடத்தை மற்றும் அணுகுமுறை முதிர்ந்ததாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும்.நானும் என் புத்தகத்தில் உள்ள அனைத்து அம்சங்கள் மற்றும் அணுகுமுறைகளும் உங்களை ராஜாவாக மாற்ற உதவும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

We gebruiken cookies om er zeker van te zijn dat je onze website zo goed mogelijk beleeft. Als je deze website blijft gebruiken gaan we ervan uit dat je dat goed vindt. Ok