Karuda Puranam - cover

Karuda Puranam

Raji Raghunathan

  • 09 augustus 2024
  • 9798882287985
Wil ik lezen
  • Wil ik lezen
  • Aan het lezen
  • Gelezen
  • Verwijderen

Samenvatting:

Karuda Puranam: - An Aurality Tamil Audio Book Production - http://aurality.app

மகா விஷ்ணு பேசுகிறார். 'அறிவிற்சிறந்த மகாத்மாக்களே! பூமியில் இருந்தபோது நரகத்திற்கு அஞ்சி, நற்செயல்களைப் புரிந்தீர்கள். அதனால்தான் மானுடரான நீங்கள் தேவர்களானீர்கள். கிடைத்தற்கரிய மானுடப் பிறவி எடுத்தும்கூட தேவர்கள் ஆவதற்கு முயற்சிக்காதவர்கள் நரகத்தில் விழுவார்கள். நீங்களோ நற்செயல் புரிந்து தேவர்களாகுவதற்கு முயற்சித்தீர்கள். பாவிகள், நிலையற்ற உடலை நிலையானது என்று பிரமையாக எண்ணி, பாவங்கள் செய்து, நரகத்தில் உழல்கின்றனர். நீங்களோ நிலைத்த சுகமான தேவநிலைக்காக நிலையற்ற உடலுக்கான சுகங்களைத் துறந்தீர்கள். காலையில் சமைத்தால் மாலையில் பாழாய்ப் போகும் அன்னத்தைப் புசிக்கும் மானுட உடல் மட்டும் பாழாய்ப் போகாமல் இருக்குமா என்ன? அதனால் உடலோடு இருக்கும்போதே கவனமாக நற்செயல் புரிந்து, தர்ம வழியில் நடந்து நரக வேதனையிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். இறைவன் அளித்த புலன்கள், செல்வம், அறிவு அனைத்தையும் நற்செயல்களுக்காகப் பயன்படுத்தினீர்கள். அதனால் புண்ணியமான இந்த இடத்தை வந்தடைந்தீர்கள். நீங்கள் இன்னும் சிறந்த புண்ணிய லோகங்களுக்குச் செல்வீர்கள். வழியில் அனைவரும் உங்களை வழிபடுவார்கள்.' கருட புராணம் ஒரு கருவூலம். மகா விஷ்ணுவால் அருளப்பட்டது.

இந்தப் பூமியில் பிறந்த மானுடர்கள் எப்படி நல்ல ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வது. நல்ல ஆத்மாக்கள் எப்படி எம லோகத்தில் ஆனந்தமாக இருக்கும் என்பதையும், கெட்ட ஆத்மாக்கள் எம லோகத்தில் எந்த எந்தக் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதையும் விவரிக்கிறது கருட புராணம்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்படாத கருத்துகளே இல்லை எனலாம். புல்லரிக்க வைக்கும் அழகுத் தமிழில் இந்த நூலை எழுதி இருக்கிறார் ராஜி ரகுநாதன். எழுத்தாளர் ராஜி ரகுநாதன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின்

Aurality tamil audio book வழங்கும் ஒலிவடிவம் கேட்போம்.

We gebruiken cookies om er zeker van te zijn dat je onze website zo goed mogelijk beleeft. Als je deze website blijft gebruiken gaan we ervan uit dat je dat goed vindt. Ok